2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யுத்தத்தில் உடமைகளை இழந்த கிராமசேவையாளர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்க வேண்டும்

Sudharshini   / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்ரி.யுதாஜித்


யுத்தம் காரணமாக தமது உடமைகளை இழந்த கிராமசேவையாளர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திலாவது நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு -கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர் சங்கம் கேட்டுள்ளது.


பொது நிருவாக மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய, மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரிம், இக்கோரிக்கையை வடக்கு - கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ளது.


இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் கே.வாமதேவன் அனுப்பி வைத்துள்ள மகஜரில்,யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வீடுகள், சொத்துக்களுக்கான நட்டஈடு வழங்கப்படாமலிருக்கிற கிராமசேவையாளர்களுடைய நட்டஈட்டுக் கொடுப்பனவு இனியாவது 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படவேண்டும்.


தற்காலிகமாக உறவினரகள், நண்பர்கள் வீடுகளில் வசித்து வருகின்ற கிராம உத்தியேகாத்தர்களுடைய வீடுகளை திருத்தி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இக்கடிதம் கடந்த 10ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாக வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் கே.வாமதேவன் சனிக்கிழமை (14) தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X