Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வர்ணத் தொலைக்காட்சிப்பெட்டியும் நீர்வடிகட்டும் உபகரணங்களும் திங்கட்கிழமை (16) கையளிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீப்தி றொஹான் விஜயவிக்கிரம தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட்டின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான இந்த சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா தெரிவித்தார்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற சாதனங்கள் கையளிப்பு நிகழ்வில் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலக பொறுப்பாளர் எம்.எச்.எம்.நளீர், ஏறாவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் முதலமைச்சரின் தற்போதைய மாவட்ட இணைப்பாளருமான ஏ.ஏ.நாஸர் மற்றும் ஏறாவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.சீ.கபூர் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago