Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 74.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் நவகிரியில் 8.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் தும்பங்கேணியில் 6.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் வாகனேரியில் 12.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் கட்டுமுறிவுக்குளத்தில் 37 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் உன்னிச்சையில் 42 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், றூகமில் 45.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் மயிலம்பாவெளியில் 29.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இடைக்கிடையில் மழை பெய்துவருகின்றது. மேலும், பெரும்போக அறுவடை நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இறுதிநேரத்தில் இவ்வாறு மழை பெய்வதால் விவசாயிகளுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago