Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மார்ச் 14 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வீதி விபத்தில் இரு கால்களையும் இழந்த லொறி உதவியாளரான இளம் குடும்பஸ்தருக்கு, வெள்ளிக்கிழமை (13) சுயதொழிலுக்கான உதவி வழங்கப்பட்டது.
ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச் சேர்ந்த எம். பஸ்மீர் என்ற இளம் குடும்பஸ்தர், சமீபத்தில் ஏற்பட்ட வீதி விபத்தொன்றின் போது, தனது இரு கால்களையும் இழந்தார்.
இந்நிலையில், அவரின் வாழ்வாதாரத்தையும் நாளாந்த ஜீவனோபாயத்தையும் கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ் சுபைர், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிய 50,000 ரூபாய் மூலம் அமைக்கப்பட்ட சிறு கடையொன்று அவரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில், அதிதியாக கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், மட்டக்களப்பு மாவட்ட தேசிய காங்கிரஸின் செயலாளரும் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான எம்.எஸ். நஸீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். அஸீம், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஸாகீர் ஹுஸைன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago