2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வரட்சி காரணமாக செங்கலடிப்பற்றில் குடிநீருக்கு தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக மட்டக்களப்பு, செங்கலடிப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீருக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுவருவதாக அப்பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் தெரிவித்தார்.

இந்தப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரலக்குளம் கிராம அலுவலகர் பிரிவில் 350 குடும்பங்களைச் சேர்ந்த 1,024 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக ஈரலக்குளம்  கிராம  அலுவலர் ரி.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இலுக்குப்பொத்தானை, குடாவெட்டை, வெள்ளையன்சேனை, வேரம் உட்பட  18 கிராமங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வேரம் கிராமத்தில் மூன்று பொதுக்கிணறுகள் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு கிணறுகளில் வரட்சியால் நீர் முற்றாக வற்றியுள்ளது. ஒரு கிணற்றிலிருந்து மாத்திரமே குடிநீரை பெற்றுவருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஏனைய தேவைகளுக்கு குளத்து நீரை பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறினர்.

வரட்சியால் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள கிராமங்களுக்கு பௌசர்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கான நடவக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் செங்கலடிப்பற்று பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X