Suganthini Ratnam / 2015 ஜூன் 01 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை ஆர்;ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெண்கள் அமைப்புகள், பெண்கள் வலையமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தங்களது வாய்களை கறுப்புத்துணிகளினால் மூடிக்கட்டியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன்போது, கையெழுத்துவேட்டையும் இடம்பெற்றது.
இதேவேளை, புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்தும் இக்கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தியும் கண்டனப் பேரணி மட்டக்களப்பு மாவட்ட மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (01) வெலிக்காகண்டியில் இடம்பெற்றது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago