Suganthini Ratnam / 2015 ஜூலை 17 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.கே.எல்.ரி.யுதாஜித்
மக்கள் தங்களுடைய உரிமையை நிலை நாட்டுவதற்கு மாத்திரமே வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும். வாக்குரிமையை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தினால் அம்மக்கள் ஜனநாயகத்தை அனுபவிப்பதற்கு தகுதி அற்றவர்களாக காணப்படுவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி குமாரவேலியார் கிராமத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் முன்றலில் புதன்கிழமை (15) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பியிலேயே அவர் மேற்கொண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள் என்ற ரீதியில் சரியான முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால்;, நான்கு ஆசனங்களை பெறமுடியும்' என்றார்.
'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எமது மக்களிடம் ஆதரவு கேட்டு நீங்கள் அளித்த வாக்குகளின் மூலம் புதிய ஆட்சியை நிறுவினோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago