2025 மே 15, வியாழக்கிழமை

எரிவாயு கசிவினால் வீடு தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 20 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடியிலுள்ள வீடொன்றிலிருந்த சமையல்  எரிவாயு சிலின்டரில்  சனிக்கிழமை (18) எரிவாயு கசிந்து தீப்பற்றியதால், அவ்வீடு தீக்கிரையானதாக   காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (18) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது வீட்டின் உட்கூரை மற்றும் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
எவ்வாறாயினும், தீ  பரவிய வேளையில் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் ஓடித் தப்பியதால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று  வீட்டு உரிமையாளர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .