Princiya Dixci / 2015 ஜூலை 30 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது 4 ஆசனத்தையாவது தமிழர்கள் கைப்பற்ற வேண்டுமாயின் அனைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாகரையில் நேற்று புதன்கிழமை (30) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்ற பதவியை கொண்டு என்னையோ, எனது குடும்பத்தையோ, எனது குடும்ப உறவுகளையோ அபிவிருத்தியடைய செய்யவில்லை. தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்து பணமும் பெறவில்லை. காரணம் இது ஒரு தூய பணி. அதை திறம்பட மேற்கொள்வதை கடமையாக கொண்டேன்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவானது நீண்டகாலமாக இம்மண்ணில் எது தமிழ் இனத்தின் உரிமைக்காக போராடிய எமது உறவுகளின் தியாகங்களின் முடிவை சர்வதேசத்தின் அனுசரணையுடன் பெறக்கூடிய சூழலை தரவல்லதாகும்.
அந்த வகையில் தமிழினத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் இத்தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
13 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
4 hours ago