2025 மே 02, வெள்ளிக்கிழமை

30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நீடித்து நிலைக்கக் கூடிய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (Sustainable Economic Development) ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராகேணி கிராமத்தில் வாழ்வாதார உள்ள வறிய குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தவர்களுக்கு இந்த வாழ்வாதார உதவிக்கான பொருட்கள் வழங்கப்பட்டன.
 
ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் முஸ்லிம் எயிட் நிறுவன வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.ஜி.எம். பஹ்மி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நிகழ்வு இடம்பெற்றது.
 
பாரம்பரிய கைத்தொழிலான பன்புல் உற்பத்தி, பனையோலை உற்பத்தி, முந்திரிப் பருப்பு பதனிடல், உடைகள் தயாரித்தல், தையல், கோழி வளர்ப்பு, சிறு கடை நடாத்துதல் போன்ற கைத்தொழில்களைச் செய்ய முன்வந்த குடும்பத் தலைவிகளுக்கே இந்த வாழ்வாதார உதவிகள் கிட்டியதாக முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். அஸ்மி தெரிவித்தார்.
 
நிகழ்வில் முஸ்லிம் எயிட் இலங்கைக் கள அலுவலகத்தின் வதிவிடப் பிரதிநிதி ஏ.சி. பைஸர்கான், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உட்பட இன்னும் பல அதிகாரிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X