2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்களை பெற்றுகொடுக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சனிக்கிழமை (3) தெரிவித்தார்.

'மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக குடிநீர் இணைப்புகளை பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றும் இதன்போது தெரிவித்தார்.

குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அதன் உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(3) வவுணத்தீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகங்களில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சு இதற்காக முதல் கட்டமாக இருபது இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன், பிரதேச செயலாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X