Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மே 23 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுக் காணும் முகமாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தோட்டக் கம்பனிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக, இ.தொ.காவின் உப தலைவரும், சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநருமான எம்.வேங்குருசாமி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறியுள்ள அவர்,
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நிர்வாக ரீதியில் தினமும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இதற்கமைவாக, எதிர்வரும் 25,26ஆம் ஆகிய திகதிகளில், கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரி கேட்போர் கூடத்தில், பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
25ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு, பொகவந்தலாவை பிளான்டேசனுக்கு உட்பட்ட தோட்ட நிர்வாகிகளையும் கம்பனி நிறைவேற்று அதிகாரிகளையும் சந்தித்து, இ.தொ.கா கலந்துரையாடவுள்ளது.
இதேவேளை, 26ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு, மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உட்பட்ட தோட்ட முகாமையாளர்கள் மற்றும் கம்பனி நிறைவேற்று அதிகாரிகளையும் இ.தொ.கா சந்திக்கவுள்ளது.
ஆறுமுகன் தொண்டமான் எம்.பி தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடல்களில், இ.தொ.காவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாணசபை அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இ.தொ.கா உப தலைவர் எஸ்.அருள்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
35 minute ago
45 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
45 minute ago
58 minute ago
3 hours ago