Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அக்குறணை பிரதேச சபையின் புதிய தவிசாளராக, சுயேட்சைக் குழுவில் ஒட்டகச் சின்னத்தில் போட்டியிட்ட ஐ.எம்.இஸ்திஹார் தெரிவானார்.
அக்குறணை பிரதேச சபையின் புதிய தவிசாளரையும் உப தவிசாளரையும் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு, நேற்று (04) மாலை, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, சுயேட்சைக் குழு சார்பில் போட்டியிட்ட ஐ.எம். இஸ்திஹாரின் பெயரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அஜ்மீர் பாரூகின் பெயரும் முன்மொழியப்பட்டன.
தவிசாளர் பதவிக்கு இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டதால், இரகசிய வாக்கெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதன்போது, இருவரும் 15 வாக்குகள் வீதம் சமமாக வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், குலுக்கல் மூலம் தவிசாளரைத் தெரிவுசெய்ய ஆணையாளர் தீர்மானித்தார்.
இதன்படி, குலுக்கள் முறை கூலம் சுயேட்சைக் குழு உறுப்பினர் ஐ.எம்.இஸ்திஹார், தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அதன் பின்னர், உப தவிசாளர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத் அமரக்கோனின் பெயரும், ஐக்கிய தேசிய கட்சியின் எஸ்.எம். பீ டி அல்விஸின் பெயரும் முன்மொழியப்பட்டது.
இதையடுத்து, இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில்,15 வாக்குகளைப் பெற்று சரத் அமரக்கோன், உப தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025