2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

அதிகளவு பஸ் கட்டணம் அறவீடு: பயணிகள் முறைப்பாடு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

ஹட்டன்-மஸ்கெலியாவுக்கிடையில் சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ்கள், அதிகளவு பஸ் கட்டணத்தை அறவிடுவதாக, பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பஸ் கட்டணம் அறவிடுவதற்கு முன்பாக, மஸ்கெலியா நகரிலிருந்து நோர்வூட் நகருக்கு 25 ரூபாயும் நோர்வூட் நகரிலிருந்து ஹட்டனுக்கு 20 ரூபாயும் அறவிடப்பட்டது. ஆனால் தற்போது, அரசாங்கம் முன்மொழிந்துள்ள பஸ் கட்டணத்துக்கும் மேலதிகமாக, மேற்படி தனியார் பஸ் நடத்துனர்கள் கட்டணங்களை அறவிடுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஹட்டன் - நோர்வூட் நகருக்கு  30 ரூபாயும் நோர்வூட்- மஸ்கெலியாவுக்கு  30 ரூபாய் அல்லது 40 ரூபாயை அறவிடுவதாகவும், கட்டணம் அறவிட்டதற்கான  பயணச்சீட்டை  வழங்குவதில்லை எனவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .