Kogilavani / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார
நாவுல, உடுதெனிய பிரதான வீதிக்கருகில், அநாதரவான நிலையில் விழுந்துக் கிடந்த வயோதிபர் ஒருவரை, பொலிஸார் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (4) மாலை மேற்படி வயோதிபர் மீட்கப்பட்டுள்ளார். அந்த வயோதிபரின் உடலில் காயங்கள் காணப்படுவதால் அவரை வைத்தியசாலையில் சேர்த்ததாகப் பொலிஸார் கூறினர்.
இவரைப் பற்றிய முழுமையான தகவல் அறிந்தவர்கள், 066 -2246222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .