Editorial / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராய்ச்சி
பெண்ணொருவரை படுகொலைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை தொகுதி அமைப்பாளர் லக்ஷ்மன் திஸாநாயக்கவின் விளக்கமறியல் இம்மாதம் 30ஆம் திகதி வரையிலும் நீதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, கேகாலை நீதவான் வாசனா நவரத்ன, கடந்த 16 ஆம் திகதியன்று பிறப்பித்தார். அன்றையதினம் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாகவே, அவரை சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
அத்துடன் கேகாலை ஆதார வைத்தியசாலையில் ஆஜர்படுத்தி, இரத்த மாதிரியை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
மரணமடைந்தவரின் மரண பரிசோதனை அறிக்கை, வழக்கு கோவையில் இல்லை என்பதனால், மரண பரிசோதனை அறிக்கையை அனுப்பிவைக்குமாறு கேகாலை வைத்தியசாலை நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கேகாலை களுகல்ல மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் பயணியாற்றிய சகுந்தலா வீரசிங்க (வயது 38) துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலைச் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025