Niroshini / 2016 செப்டெம்பர் 06 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பூவரசன்
பசறை - அம்மனிவத்தை தோட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்க தூக்கில் தொங்கிய நிலையில், 15 வயதுடைய சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகிலிருந்து 50 மீற்றர் தொலைவிலுள்ள மறைவான மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவனின் சித்தி, தந்தை ஆகியோரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .