R.Maheshwary / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
எட்டியாந்தோட்டை மற்றும் கித்துல்கலை ஆகிய பிரதேசங்களை ஊடறுத்துச் செல்லும் களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் நீராடும் போது, அவதானத்துடன் செயற்படுமாறு எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரியங்கனி பேதங்கொட பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவனொளிபாதமலை யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் பலர் எட்டியாந்தோட்டை மற்றும் கித்துல்கலை பகுதிகளில் களனி கங்கையில் நீராடுவதற்கு ஆர்வம் காட்டுவதுடன், இவர்களுள் பலர் பாதுகாப்பற்ற முறையில் ஆற்றில் இறங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் கடந்த சில வருடங்களாக குறித்த பகுதிகளில் நீராடச் சென்ற பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, நீராடுவதற்கு ஆபத்து என குறிப்பிடப்படும் இடங்களில் நீராடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
2 minute ago
11 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
11 minute ago
17 minute ago
23 minute ago