Editorial / 2026 மார்ச் 30 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் அரசியல் களத்தில் முழு வீச்சில் இறங்கியுள்ள நிலையில், அவரைச் சுற்றி புதிய சர்ச்சையும் பரபரப்பும் உருவாகியுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் முன்பே, அவருக்கு எதிராக நடிகை களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் ரசிகர்களிடமும் அதிகமாக பேசப்படுகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் காண முடிவு செய்துள்ளது. மொத்தம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், விஜய் தானே இரண்டு முக்கிய தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகியவை அதில் முக்கியமானவை. இந்த முடிவு, அவரது அரசியல் பயணத்தில் மிகப்பெரிய சவாலான கட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த முறை, பல புதிய முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளில் இருந்து விலகி வந்த சிலருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளதால், கட்சியின் அமைப்பு விரிவடைவது தெரிகிறது.
அதே நேரத்தில், "இந்த தேர்தலில் முக்கியமான போட்டி திமுக மற்றும் தவெக இடையே தான்" என்ற தனது நிலைப்பாட்டையும் விஜய் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் தான் எதிர்பாராத திருப்பமாக, பிக் பாஸ் ஜூலி விஜய்க்கு எதிராக நேரடியாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய வருவதற்கு முன்பே, "நான் ஏற்கனவே ஆரம்பிச்சுட்டேன்" என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
"நீ நாளைக்கு வர்ற, நான் இன்னிக்கே ஆரம்பிச்சுட்டேண்ணே... வா பாத்துக்கலாம்" என்ற அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜூலி கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் அவரது கட்சியை விமர்சித்து வந்தார். அந்த விமர்சனங்கள் வீடியோக்கள் மூலமாக வெளியாகி வந்த நிலையில், இப்போது நேரடியாக தேர்தல் களத்தில் எதிராக குரல் கொடுத்திருப்பது விஷயத்தை இன்னும் தீவிரமாக மாற்றியுள்ளது.
25 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago