Kogilavani / 2017 ஜூன் 30 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொட்டகலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசலையின் ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்வதற்கு சென்ற பெற்றோருக்கும் குறித்த ஆசிரியருக்கும் இடையில் முறுகல் நிலைமை உருவாகியது.
இதனை தொடர்ந்து ஆசிரியரும் பெற்றோரும் அங்கிருந்த மாணவர்கள் சிலரும் கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது ஆசிரியர் ஒருவர், காயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தாக்குதலுக்குள்ளான பெற்றோர் ஒருவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்ற நிலைம ஏற்பட்டுள்ளதோடு, குறித்த பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago