Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
ஆதிவாசிகளின் பாரம்பரிய வாழ்வியல் முறைகளையும் அவர்களுடைய பாரம்பரிய கலை, கலாசார முறைகளையும் வளப்படுத்திப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மஹியங்கனை, தம்பான ஆகிய ஆதிவாசிகளின் கிராமங்களுக்கு விஜயம்செய்து, ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோவைச் சந்தித்துக் கலந்துரையாடியனார்.
இதன்போது, ஆதிவாசிகள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமது பரம்பரையைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் ஆதிவாசிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் ஆதிவாசிகளின் தலைவர் வன்னியலத்தோ, ஆளுநருக்குக் கையளித்தார்.
37 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
1 hours ago