Kogilavani / 2016 மார்ச் 09 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஷெல்டன், காஞ்சன குமார
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மரக்கறி செய்கையாளர்களுக்கும் மற்றைய பகுதியில் வாழும் விவசாயிகளைப் போன்று உரமானியங்களைப் பெற்றுத்தருமாறு கோரி நுவரெலியா, சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திலுள்ள நுவரெலியா விவசாய அமைப்பினரும் தம்புளையிலுள்ள விவசாயிகளும் நேற்று செவ்வாய்க்கிழமை (08), எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய மலைநாட்டு விவசாயிகளைப் பேணிக்காப்போம், உரிய முறையில் உரமானியங்களைப் பெற்றுக்கொடுப்போம் போன்ற பதாதைகளை விவசாயிகள் ஏந்தியிருந்தனர்.
மற்றைய பிராந்தியங்களில் வாழும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் எவையும் தங்களுக்குக் கிடைப்பதில்லை எனவும் இவ்வார்பாட்டமானது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவோ அரசாங்கத்துக்கு சேறு பூசும் நடவடிக்கையாகவோ அல்ல என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago