Editorial / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}



+எஸ்.சதிஸ்
காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயாவின் நீரானது, இன்றுக் காலை கறுப்பு நிரமாக மாறியமைத் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
கெசல்கமுவ ஓயா ஆற்றின் நீரானது, இன்று காலை கறுப்பு நிறமாக மாறியுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.
தொழிற்சாலை கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கும் பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொகவந்தலாவையில் பகுதியில் தேயிலைத் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .