Kogilavani / 2017 மே 01 , பி.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
“ஆறுமுகன் தொண்டமானின் மக்கள் பலத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும்” என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
“மலையகத்தில், ஆறுமுகன் தொண்டமானின் மக்கள் பலத்தை அசைக்கமுடியாது. தொண்டமானின் மக்கள் பலத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஆட்சிபீடமேறுவார். மீண்டும் இந்த ஆட்சியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாங்கள் கைப்பற்றுவோம்” என்றும் அவர் கூறினார்.
இலங்கை தொழிலாளர் காங்ரஸின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், வீதியில் இறங்கிப் போராடியதன் விளைவாகவே, மலையக மக்களுக்கு வாக்குரிமைக் கிடைத்தது. அவரைப்போன்றே, மலையக மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்க ஆறுமுகன் தொண்டமான் தலைமையேற்று போராடி வருகின்றார்.
ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெறும் இந்த மேதினக் கூட்டத்தில், பாதை முழுவதும் மக்கள் வெள்ளம் நிறைந்துக்காணப்பட்டது.
இதனால், நான் நடந்துவந்தே மேடையை அடைந்தேன். ஆறுமுகன் தொண்டமான் மலையகத்தின் சிறந்த தலைவன் என்பதை, இந்த மக்கள் கூட்டம் பறைசாற்றுகின்றது.
அமரர் சொமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்களுக்காக அன்று வீதியில் இறங்கிப் போராடினார். அவரைப் போன்றே, அவரின் பின்னாள் கட்சியின் கொடியை பிடித்த ஆறுமுகன் தொண்டமானும் மலையக மக்களின் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்.
பணத்துக்காகவும் பதவிக்காவும் கட்சித்தாவும் சிலருக்கு மத்தியில் இவர் முன்மாதிரி. கடந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவர், இலட்சியத்தோடும் கொள்கையோடும் இருந்து வருகின்றார்” என்றார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago