2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

ஆலயங்களில் ஆன்மீக செயற்பாடுகளை விட அரசியல் நடவடிக்கைகளே அதிகமாகவுள்ளது: ரமேஸ்

Sudharshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்  

தோட்டப்புறங்களிலுள்ள ஆலயங்களில் ஆன்மிக செயற்பாடுகளை விட, அரசியல்வாதிகளின் கூட்டங்களே அதிகமாக நடைபெறுகின்றன என்று மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ் தெரிவித்தார்.

ஆலயங்களில் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் சமுகத்தில் இன்று இன ஒற்றுமை இல்லாமல் செய்யப்படுகின்றது. எனவே, இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி ஆலயங்களை நாம் முறையாக வழிநடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொகவந்தலாவை, எல்பட மேற்பிரிவு தோட்டத்திலுள்ள ஆலயத்துக்கு விநாயகர் சிலையையும் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்திலுள்ள ஆலயத்துக்கு மின்சார காண்டாமணியையும் ஞாயிற்றுக்கிழமை (03) வழங்கி வைத்து உரையாற்றும்போதே ரமேஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மலையக தோட்டப்புறங்களிலுள்ள ஆலயங்களில் அறநெறிப் பாடசாலைகள் நடத்தப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. ஆனால், நகர் புறங்களிலுள்ள ஆலயங்களில் அறநெறிப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன' என்று சுட்டிக்காட்டினார்.

'இம்மாதத்திலிருந்து தோட்டப்புறங்களிலுள்ள ஆலயங்களில் அறநெறிப் பாடசாலைகளை  நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாகவும் இது குறித்து அமைச்சில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவித்து அதற்கான உபகரணங்களையும் பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும்' அவர் கூறினார்.

இதேவேளை, 'இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு 75 வருட காலப் பகுதியில், மலையகத்தில் பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள் என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன' மலையகத்தில் கல்வி இன்று வளர்ச்சி அடைந்தமைக்குக் காரணமாக  விளங்கியது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மறைந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுமே ஆவர்'  'தோட்டபுறங்களில் உள்ள பாடசாலைகலை அபிவிருத்தி செய்வதற்கு இந்த முறை மாத்திரம் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு 205 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்துள்ளது' என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .