2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

இடைக்கால கொடுப்பனவின் நிலுவையை வழங்குமாறு 500 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஷ்

தங்களது இடைக்கால கொடுப்பனவான 2,500 ரூபாய், இரண்டு மாதங்களாக நிலுவையில் உள்ளதாகவும் அதனை உடனே வழங்கவேண்டும் என்று கோரியும், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தேயிலைச் சபைக்குச் சொந்தமான செங்கும்ஸ் பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட அதிகாரி சரத் அபேசிங்கவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று புதன்கிழமை (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 500 தோட்டத் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைக்கு தான் 1,000 ரூபாயை வழங்குதாகவும் மிகுதி தொகையை இரண்டு வாரத்துக்குள் வழங்குவதாகவும் தோட்ட அதிகாரி தெரிவத்தும், அதற்கு ஒத்து வராத நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .