Kogilavani / 2020 நவம்பர் 03 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ், பெருந்தோட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 9 பாடசாலைகளுக்கு, 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று, கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதுத் தொடர்பிலான விளக்கத்தை, செந்தில் தொண்டமான் அதிகாரிகளுக்கு வழங்கியதுடன், அதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டன.
அத்துடன், கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் தலைமையில், வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் எதிர்வரும் ஓர், இரு மாதங்களில் நாட்டப்படும் எனவும் செந்தில் தொண்டமான் அமைச்சின் அதிகாரிகளிடம் விளக்கமளித்தார்.
பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சேவைகளுக்கு இதன்போது செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago