Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவானிஸ்ரீ
நாட்டில் இன ஐக்கியத்தை மேலும் பலப்படுத்தும் முகமாக கேகாலை புனித மரியா வித்தியால மாணவர்கள், பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் நேற்று(01) கேகாலை நகரில் இடம்பெற்றது.
கேகாலை புனித மரியா வித்தியாலயத்தின் 148 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை நாட்டில் மக்களுக்கிடையில் சமாதானத்தை மேலும் கட்டி எழுப்புவதை நோக்கமாக கொண்டே இந்த பாதயாத்திரை ஊர்வலம் பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி பாதயாத்திரையில் கேகாலை புனித மரியா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க தலைவரும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சருமான மஹிபால ஹேரத், வித்தியாலய அதிபர் ஹேமா விக்கிரமசிங்க, மாணவர்கள், பழைய மாணவர்கள், அசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் உட்பட 5000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.
பிரித்தானிய ஆட்சி காலத்தில் 1867ஆம் ஆண்டு 20 மாணவர்களுடன் ஒரு ஆசிரியரை கொண்டு உருவான இப்பாடசாலை தற்போது 3700 மாணவர்களுடன் 165 ஆசிரியர்களை கெண்டு இயங்கி வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago