Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
நாவலப்பிட்டியிலிருந்து கம்பளை நோக்கிச் சென்ற பாரவூர்தியொன்றும், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டியை நோக்கிச் சென்ற பாரவூர்தியொன்றும், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் காயமடைந்தனரென, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி, வரக்காவ ரயில் பாதுகாப்புக் கடவைக்கு அருகாமையிலேயே, இந்த விபத்து, நேற்று முன்தினம் (21) மாலை இடம்பெற்றது.
இந்த விபத்தை ஏற்படுத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டியை நோக்கிச் சென்ற பாரவூர்தியின் சாரதியை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
39 minute ago