2025 ஜூலை 16, புதன்கிழமை

இரத்தினபுரி பாடசாலைகள் நாளை திறக்கப்படும்

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (11) திறக்கப்படும் என மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட மற்றும் எஹெலியகொட பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக நாளைய தினம் பாடசாலைகளை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குரிய பாடசாலை தினத்தை வேறொரு தினத்தில் நடத்துவதற்கான அறிவுறுத்தல்களை விரைவில் அதிபர்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மகிந்த வீரசூரிய தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .