Princiya Dixci / 2017 மே 03 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் அராய்ச்சித்துறை இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்னவை, பதுளை நீதவான் நீதிமன்றத்தில் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி, ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதுளை நீதவான் நீதிமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்ததன் பின்னரே, நீதவான் ருவந்திகா மாரசிங்க மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அத்துடன், அழைப்பாணையையும் அனுப்புமாறும் நீதிமன்ற பதிவாளருக்கு பணித்தார்.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கடமையில் ஈடுபட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினரைத் தாக்கியமை குறித்த முறைப்பாடு தொடர்பிலேயே, மேற்படி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அன்றையதினம் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago