R.Maheshwary / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், மலைவாஞ்சன்
மலையக மக்களுக்கு சேவையாற்றவே தான் அரசியலுக்கு வந்தேன் என தெரிவித்துள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான தனது பணி தொடரும் என்றார்.
ஹட்டன்- மல்லியப்பு புருட்ஹில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய வீடமைப்பு திட்டத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
“உண்மையை பேச வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், உண்மையாக வாழ வேண்டும் என்பதே எமது பழக்கம். அந்தவகையில் மலையக மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் அரசியலுக்கு வந்தேன். மாறாக இருப்பவற்றை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு அல்ல” என்றார்.
எமது பெருந்தோட்ட மக்களை ஒரு சில அரசியல் தலைமைகள் லயத்தில்தான் வாழ வைத்தனர். ஆனால் தனக்கு அமைச்சு பதவி கிடைக்கப்பெற்று குறுகிய காலப்பகுதியிலேயே தனி வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றளவிலும் அத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அமைச்சு பதவியை சரியாக பயன்படுத்தி, மக்களுக்கு சேவை செய்தேன். அதனால்தான் புதிய சின்னத்தில் போட்டியிட்டபோதும்கூட 83 ஆயிரம் மக்கள் தனக்கு வாக்களித்தனர். தனது உயிர் இருக்கும்வரை மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.
4 minute ago
10 minute ago
11 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
11 minute ago
12 minute ago