Editorial / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
இலங்கையின் தேயிலைத் தூள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி, தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார்.
தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து, இலங்கைத் தேயிலைத் தூளுக்கு தடைத் விதிப்பது தொடர்பில், ரஷ்யா விடுத்துள்ள அறிவிப்பு குறித்து கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை தேயிலைத் தூளில் ஒரு வகையான வண்டு இனம் இருந்ததாகவும் அதன் பின்னரே, ரஷ்யா மேற்படி அறிவிப்பை விடுத்திருந்ததாகவும் ஊடகங்கள் ஊடாக அறிய முடிந்தது.
“இலங்கையிலும், தேயிலை மலைகளிலும் “கெப்ரா” என்றழைக்கப்படும் வண்டு இனம் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.
“இந்த வண்டு இனம், இலங்கைத் தேயிலைகளில் இல்லையெனவும், தேயிலையை, ரஷ்யாவுக்கு ஏற்றிச் சென்ற கொள்கலன்களிலே இந்த வண்டுகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“எனினும், இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கைத் தேயிலைதுறைக்கு இது புதியதொரு பிரச்சினைதான் என்று சொல்ல வேண்டும். ஆகவே, இந்தப் பிரச்சினை தொடர்பிலும், கெப்ரா வண்டு எவ்வாறு ஊடுறுவியது என்பதையும் கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“ஆய்வுகளின் பின்னர் இதற்குச் சரியான தீர்வை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதுவரையில் தேயிலைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் உறுதியான கருத்துகளைக் கூற முடியாது.
“எனினும், இதனால் இலங்கைத் தேயிலை துறைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படபோவதில்லை என்பது மாத்திரம் தெரிவிக்க முடியும்” என்றார்.
7 minute ago
10 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
54 minute ago
1 hours ago