R.Maheshwary / 2022 ஜனவரி 26 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
இலங்கை போக்குவரத்துச் சபையில் ஏற்பட்டிருக்கும் சாரதிகள் மற்றும் நடாத்துனர்கள் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆகவே, எமது சமூக இளைஞர்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி, கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளும்படி, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலம் கேட்டுள்ளார்.
தொடர்ந்து அவ் அறிக்கையில்'
சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இரு பதவிகளும் ஒப்பந்த அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்திற்கமைய, குறைந்த வருமானமுள்ள குடும்பத்தினருக்கு விசேட கவனம் செழுத்தப்படவுள்ளது.
பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள், பிரதான மனித வளப்பிரிவு முகாமையாளர், ஸ்ரீ லங்கா போக்குவரத்துச் சபை, இலக்கம் 200, கிருள வீதி, நாரஹேன்பிட்ட, கொழும்பு – 05 என்ற முகவரிக்கு 15.02.2022க்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பப்படும் கடித உறையில் இடது பக்க மேல் மூலையில் பதவியின் பெயர் குறிப்பிடல் வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .