2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான பெயர்ப்பட்டியல் 28ஆம் திகதி தாக்கல்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 22 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

2015/2016ஆம் ஆண்டுக்கான இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான பெயர்ப்பட்டியல் விவரங்களை எதிர்வரும் 28ஆம் திகதி காலை 8 மணிமுதல் 12 மணிவரை தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் 4 பேரை தெரிவு செய்வதற்காக இரத்தொட்டை, தம்புள்ள, லக்கல மற்றும்  மாத்தளை தேர்தல் தொகுதிகளிலுள்ள 509 இளைஞர் சங்கங்களிலிருந்து 10,774 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாத்தளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எல்.கே.ரத்நாயக்க தெரிவித்தார்.

18 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவர்களே வேட்பாளர்களாகப் போட்டியிட முடியும். தேர்தல் தொடர்பான விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக வேட்பாளர்கள், பிரதேச செயலாளர் அலுவலகத்திலுள்ள இளைஞர் விவகார அதிகாரியைச் சந்தித்து ஆலோசனை பெற முடியும் என ரத்நாயக்க மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .