Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 10 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். செல்வராஜா
ஊவா மாகாண சபையில் அமைச்சர்கள் நியமனங்கள் பூர்த்தியடையமையினால், தேவை கருதி மாகாண சபையை நாடி வரும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், அமைச்சுக்குரிய உத்தியோகத்தர்களும் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன், ஊவா மாகாண சபையில் மீதமிருக்கும் அமைச்சர் ஒருவர் இன்னும் நியமிக்கப்படாமையினால், அந்நியமனம் தொடர்பாக பெரும் இழுபறி நிலை தொடர்ந்த வண்ணமுள்ளது. இவ்வமைச்சர் நியமனத்துக்கு ஊவா மாகாண சபை உறுப்பினர்களான அனுர விதானகமகே, ஹேமா ரட்நாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
மாகாண சபைக்கு முதலமைச்சர் உட்பட 05 அமைச்சர்களே மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மாகாண சபை சட்ட வரைபிலும் இந்நியதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊவா மாகாண சபையைப் பொறுத்த வரையில் முதலமைச்சர் உட்பட 04 அமைச்சர்களே இதுவரையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமிருக்கும் ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்ட பின்னரே, ஊவா மகாண சபை முழுமையடையும்.
ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க உட்பட் மாகாண அமைச்சர்களாக செந்தில் தொண்டமான், சாலியசுமேத குமாரசிரி ரட்ணாயக்க ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago