Sudharshini / 2016 ஜனவரி 18 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் இலங்கையில் எங்களை வளரவைக்கும். ஈழத்தழிழர்களை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு உதவி செய்து அவர்களின் வாழ்வை சிறப்பிக்க முன்வர வேண்டும் என இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாண்டிச்சேரியில் நடைபெற்ற உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக தனது உயிரை கொடுத்து செயற்படுவதற்கும் தயாராக இருக்கின்றது. இன்று இலங்கையில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இங்கிருந்து சென்ற தொப்புள் கொடி உறவுகள் மலையகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் தமிழ் அரசகரும மொழியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் எமது நாட்டின் நாணயத்தாள்களிலும் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வகையிலும் தமிழ் மொழிக்கு அரச அங்கீகாகரம் கிடைத்துள்ளது.
இலங்கையில் இருக்கின்ற ஒரு சில இனவாத அமைப்புகள் கடந்த காலங்களில் எமது தமிழ் மொழியை அடக்கி ஆழ நினைத்ததன் காரணமாக, அங்கு யுத்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக நாம் 30 வருடங்கள் பின் நோக்கி செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நாம் பாரிய உயிர் இழப்புகளையும் உடமைகளையும் இழக்க வேண்டியும் இழந்தோம். ஆனால், நாங்கள் யுத்தத்தின் பின்பு படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகின்றோம். இந்த யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மக்களும் மலையக இளைஞர்களும் பாதிக்கப்பட்டனர்.
எமது தமிழ் மொழியை பாதுகாத்து வருகின்ற பெருமை வடக்கு கிழக்கு மக்களையே சாரும். காரணம் அவர்கள் அதற்காக போராடியவர்கள். யுத்தத்தின் பின்பு தற்பொழுது தமிழ் மொழிக்கு இலங்கை அரசாங்கம் உரிய அந்தஸ்தை கொடுத்து வருகின்றது. புதிய அரசாங்கத்தை ஆட்சி செய்து வரும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தமிழர்களின் விடயம் குறித்து அவதானம் செலுத்தி வருகின்றனர். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்பொழுது ஒரு எதிர்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடலாம்.
அது மட்டுமல்லாமல் அண்மையில் கொண்டாடப்பட்ட தமிழர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான பொங்கல் விழா, மலையகத்திலும் வடக்கு கிழக்கிலும் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டது. அதற்கு இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் வடக்குக்கு விஜயத்தின் போது, அமைச்சர் இராதாகிருஸ்ணனுக்கு தமிழ் கல்வி அபிவிருத்தியை கையளித்துள்ளேன் என கூறியுள்ளார். அதாவது, தற்பொழுது இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்பான அமைச்சுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அமைச்சுகள் எதற்கும் உதவாத பெயரளவில் மாத்திரமே அமைச்சர்களாக இருந்தார்கள்.எதனையும் செய்ய முடியாது.இன்று இலங்கையில் தமிழ் மொழியை வளர்தெடுப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.அதே நேரத்தில் அங்கிருக்கின்ற பெரும்பான்மை மக்களை பாதிக்காத வகையில் நாம் அதனை செய்ய வேண்டும்.
இந்த உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் அடுத்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.அதற்கு எமது இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் என்னால் கூற முடியும்.எதிர்காலத்தில் இந்த பண்பாட்டு இயக்கம் இன்னும் வளர்ச்சி பெற வேண்டும்.அதற்கு இலங்கை அரசாங்கத்தின் மூலமாக அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்;.
இதில் மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் பலர்; கலந்துகொண்டனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago