Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
'உக்குவளை குடு சுத்தி' என்ற பெயரில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரையும் அவரது கணவர் மற்றும் கணவனின் சகோதரி ஆகியோரையும் மாத்தளை பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர், நேற்று (22) கைதுசெய்துள்ளனர்.
மாத்தளை- உக்குவளைப் பிரதேசத்தில் வைத்து, மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பெண், சிகையலங்கார தொழிலில் ஈடுபடும் போர்வையில், போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் கண்டியிலிருந்து மாத்தளை, உக்குவளை ஆகிய பிரதேசங்களில், இவர் போதைப் பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 minute ago
13 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
39 minute ago
54 minute ago