2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

உதயா எம்.பி அரசியல் பிழைப்பு தேடுகிறார்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 19 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

தன் அரசியல் ஆசைக்காகவும் பதவி மோகத்துக்காகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து, தட்டுதடுமாறி பாராளுமன்றம் சென்ற உதயா எனும் உதயகுமார் பாய்ந்த பாய்ச்சலை விட, இ.தொகா முதுகெலும்போடும் கம்பீரமாகவும் மக்களிடத்தில் வலம் வந்து கொண்டிருப்பதாக இ.தொ.காவின் உபத்தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார்  இ.தொ.காவுக்கு எதிராக வழங்கிய உரைக்கு, பதிலளிக்கும் வகையிலேயே சச்சுதானந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் அரசியல் ஆசைக்காக தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து, அங்கு கையாலாகமல் போனதால் இ.தொ.காவோடு இணைந்து மாகாணசபைக்கு சென்று, பின்னர் மலையக உதயமென கட்சியொன்றை ஆரம்பித்து அதுவும் கைக்கொடுக்காத நிலையில், பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவி அங்கும் ஒன்றும் நடக்காத காரணத்தால், தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துக்கொண்டுள்ளார்.

உதயகுமார் அரசியல் இருப்புக்காக பாய்ந்த பாய்ச்சல்களை மக்கள் நன்கு உணர்வர். மக்களின் பொருளாதார சுமையையும் இப்போதுள்ள சூழ்நிலையும் மக்களின் உணர்வுகளையும் வைத்து அரசியல் பிழைப்பு தேடும் உதயாவை போன்றவர்களை மக்கள் மீண்டும் துரத்தியடிக்க வேண்டும். இவ்வாறானவர்களே சமூகத்தையும் மக்களையும் அரசியலுக்காக அடமானம் வைக்கின்றவர்கள் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X