Editorial / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டு மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இரண்டாம் கட்டமாக இந்திய தமிழ் நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள இந்திய தமிழ் நாட்டு அரசின் உணவு பொருட்கள் இலங்கையில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இருந்த போதிலும், தோட்டத்தில் தொழில் செய்வோர் மற்றும் தொழில் அற்றவர்களுக்கும் அந்தந்த பகுதி பிரதேச செயலகங்கள் மூலம் தோட்டப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்து தோட்ட நிர்வாகத்தின் கீழ் குடும்ப நல அதிகாரிகளினால் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்திய அரசாங்கம் முதல் கட்டமாக வழங்கிய உணவு பொருட்களில் அரிசி பத்து கிலோ மாத்திரம் தோட்டத் தொழிலாளர் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் பல தோட்டங்களில் பகிர்ந்தளிக்கப்பட்ட இந்திய அரிசி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும் ஏற்பட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க இரண்டாம் கட்டமாக இந்திய அரசு வழங்கிய உணவுப் பொருட்களில் அரிசி மாத்திரம் மாவட்ட பிரதேச செயலகத்துக்கு கொண்டுரப்பட்டு அதுவும் தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட அரிசியில் முதலாம் கட்டத்தில் அரிசி பெற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும், முதலாம் கட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட அரிசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மாத்திரம் இரண்டாம் கட்டத்தில் அரிசி வழங்கப்படுவதாக தோட்ட குடும்ப நல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மீண்டும் தோட்ட மக்களிடையே சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும் முதலாம் கட்ட அரிசியை பெற்று கொண்டவர்கள் தோட்ட குடும்ப நல அதிகாரியிடம் இது தொடர்பாக வினவிய போது நீங்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று வினவுங்கள் என பதிலளித்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை என வெறும் கையுடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில் தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க அமைப்புகளின் தலைவர்கள்,அரசியல் தலைமைகள் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025