R.Maheshwary / 2022 பெப்ரவரி 15 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. எனவே, உறுதிமொழியை மீறும் விதத்தில் காங்கிரஸ் செயற்படாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சமூர்த்தி உதவி பெரும் 100 குடும்பங்களுக்கு அதிகரிக்கப்பட்ட சமூர்த்தி உதவி கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு நேற்று (14) ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
" அரசாங்கம் எத்தகைய நல்ல விடயங்களை செய்தாலும் அதனை விமர்சித்து, குறைகூறும் விதத்திலான அரசியலையே எதிரணிகள் நடத்திவருகின்றன. மலையகத்திலுள்ள கட்சிகளும் அப்படிதான். பதவிகள் கிடைக்கவல்லை என்பதற்காக போலி பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன. அவற்றை பொருட்படுத்தாமல் நாம் மக்களுக்கு சேவையாற்றிவருகின்றோம். மக்களுக்கும் இது புரியும்.
கோதுமை மா விலை அதிகரிக்கப்படும்போது, பெருந்தோட்ட மக்களே உணவுக்காக அதிகளவு கோதுமை மாவை நுகர்கின்றனர். எனவே, அம்மக்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பில் எமது பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தினார். அதன் பலனாக 80 ரூபாய்க்கு கோதுமை மா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் மலையக மக்கள் யாசகர்களா, எதற்காக கோதுமை மா வழங்கப்படுகின்றது என மலையகத்திலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர். இப்படி குறைகூறி அரசியல் நடத்துவதே அவர்களின் நோக்கம் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது என்றார்.
7 minute ago
25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
40 minute ago