Sudharshini / 2015 ஒக்டோபர் 22 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் அநுர விதானகமகே, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்திவரும் பொலிஸ் பிரிவுக்கு நேற்று (22) அழைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
மஹியங்கனைப் பகுதியிலுள்ள அரச காணி பகிர்ந்தளிப்பின் போது இடம்பெற்ற ஊழல் குறித்தே இவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இவர் ஊவா மாகாண சபையின் காணி, நன்னீர் மீன்பிடி, சுற்றுலாத்துறை மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்த போதே, இந்த ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விடயம் தொடர்பில் இதற்கு முன்னரும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
4 hours ago
8 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Apr 2026