R.Maheshwary / 2021 ஜூலை 12 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
மஸ்கெலியா பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேரால், இன்று (12) சபைக்கு முன்பாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கறுப்புப்பட்டி அணிந்து, அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சபை அமர்வுகள் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். செண்பகவள்ளி தலைமையில், இடம்பெற்ற நிலையிலேயே, சுமார் 30 நிமிடங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இந்த அமைதிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எரிபொருள்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மலையகத்தில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துமாறு அழுத்தம் கொடுத்துமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேபோல, ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், ஊடக அடக்குமுறைக்கு இடமளிக்கமுடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago