Sudharshini / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கஹவத்த, கொடகத்தென ஓப்பாத்தையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தில் 5 வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் இப்பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸ் மோப்ப நாய் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தோட்டத்தில் கடந்த 28ஆம் திகதி, தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் இனந்தெரியாதவர்களால் இழுத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், அப்பெண்ணின் சடலத்தில் 5 வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக இரத்தினபுரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
இப்பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்காக புலனாய்வுப் பிரிவினர் உள்ளடங்கிய மூன்று பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது பொலிஸ் மோப்ப நாயும் வரழைக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட இரண்டு செருப்பு ஜோடிகளை 'ரோகி' என்றழைக்கப்படும் பொலிஸ் மோப்ப நாயிடம் முகரக்கொடுத்து அதற்கூடாக குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 10 வருடத்துக்குள் 17 பெண்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளமையால் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025