Princiya Dixci / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். செல்வராஜா
கசிப்பு பகிர்ந்தளிக்கும் மத்திய நிலையமொன்றினைப் பசறைப் பொலிஸார் கண்டு பிடித்ததோடு, கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பலவற்றையும், நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பொலிஸார் கைப்பற்றினர்.
அத்துடன், கசிப்பு பகிர்ந்தளிக்கும் மத்திய நிலையத்தின் உரிமையாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவரையும், பசறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் பகுதி அரசியல்வாதியொருவரும் அடங்கியுள்ளனர்.
பசறைப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் பேரில், எல்டெப் தோட்டத்தின் இறப்பர் பிரிவின் இரு வீடுகளை சுற்றி வலைத்து பசறைப் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago