2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா விற்பனை செய்த தந்தையும் மகளும் கைது

Niroshini   / 2016 ஜூலை 06 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

 கஞ்சா பக்கெட் பொதி செய்து விற்பனை செய்யது வந்த தந்தையையும் மகளையும் ஹட்டன் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் தனது வீட்டில் கஞ்சா பக்கெட் பொதி செய்துகொண்டிருந்த போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்வர்களிடம் இருந்து  42 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் கஞ்சா விற்பனை தொடர்பில் இதற்கு முன்னரும் பலதடவை நீதிமன்றத்தில் குற்றவாளியாக இனம் காணப்படவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான தந்தையையும் மகளையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .