Kogilavani / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
'ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் புதிதாக எந்த கட்சியை ஆரம்பித்தாலும் அது ஒருபோதும் நிலைத்திருக்காது. இந்தச் செயற்பாடு ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வெற்றிக்கு வழிவகுப்பதாகவே அமையும்' என மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளருமான சுனில் கே.அமரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,
'நாங்கள் எப்போதும் ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியிலே நிலைத்திருக்கின்றோம். இன்று சிலர், கட்சியை விட்டுவிட்டு கட்சியில் அங்கம் வகிக்காதவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். இது கட்சியின் அங்கத்தவர்களிடையே பிளவு ஏற்படக் காரணமாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் பிரதான கட்சியை பிளவுபடுத்தி, புதிய கட்சிகளை அமைத்தவர்கள் நிலையாக இருந்த வரலாறில்லை' என்றார்.
34 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
49 minute ago
2 hours ago