Sudharshini / 2016 ஜனவரி 18 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
மாத்தளை நகரின் பிரதான வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் இவற்றின் நடமாட்டத்தைக் குறைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.
கட்டாக்காலி நாய்களால் இவ்வீதிகளில் பயணித்த பலர் நாய்க்கடிக்கு இரையாகியுள்ளதாக தெரியவருகிறது. கூட்டமாகத் திரியும் நாய்கள் மற்றும் மாடுகளால் பாடசாலை மாணவர்களும் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக கண்டி-யாழ்;ப்பாணம் ஏ9 வீதி, மாத்தளை நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதிகளில் வாகனங்கள் வேகமாக பயணிக்கும்போது இடையில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் குறுக்கிடுவதால் விபத்துக்களை எதிர்கொள்வதாகவும் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மாத்தளை நகரசபை மற்றும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ள போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
12 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago