2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கண்டி,மஹியா பகுதி மக்களுக்கு தொடர்மாடி வீடமைத்துக்கொடுக்கப்படும்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஷபீக் ஹுஸைன்

கண்டி, மஹியாவையில் அடிப்படை வசதியற்ற நிலையில் வாழும் மக்களுக்கு, நவீன வசதிகளுடன் கூடிய  தொடர்மாடி வீடமைக்கும் திட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக  நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சனிக்கிழமை(20),  ஜைகா நிறுவனத்தின் நிதி உதவியுடன் கண்டி நகரக் கழிவு நீர் முகாமைத்துவத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுரையாற்றும் போது தெரிவித்தார்.

கண்டி, மஹியாவை பிரதேசத்தில் உள்ள அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், குடிசை வாழும் மக்களுக்கு, நவீன வசதிகளுடன் கூடிய தொடர்மாடி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான திட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பில், கண்டி மாநகரசபையுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். 

பழைய போகம்பரை சிறைச்சாலை அமைந்துள்ள இடத்தினை அபிவிருத்தி செய்யும் பொறுப்பினை பிரதமர் எனக்கு ஒப்படைத்துள்ள நிலையில், அவ்வேலைத் திட்டங்களை எதிர்வருங்காலங்களில் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார். 

பிரதமரின் தலைமையில், உலக மரபுரிமை நகரம் எனப் பெயர்பெற்ற இந்நகரினை பாரியளவில் அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.இவ் அடிக்கல் நாட்டுவிழாவின் போது, கண்டி மாநகர அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .