2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கந்தப்பளையில் டீசல் இல்லை

Freelancer   / 2022 ஏப்ரல் 11 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை பிரதான நகரில் இயங்கும் ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் டீசல் இல்லையென அறித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் குறித்த  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்ரோல் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருவதாக நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து  டீசல் பெற்றுக்கொள்ள சாரதிகள் தமது  வாகனங்களை வீதிகளில் வரிசைப்படுத்தி  நிறுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறு வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொரி ஒன்றில் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ள டீசலை லொரி உரிமையாளர்  கேன்களில் நிரப்பி தங்களது கடைகளில் சேமித்து வைத்துகொள்வதாகவும்,மீண்டும் இந்த லொரியை வரிசையில் நிறுத்தி மேலும் டீசலை பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது.

இதனால் வரிசையில் காத்திருக்கும் ஏனைய வாகன சாரதிகளுக்கு டீசலை பெற்றுக்கொள்வதில் அசௌகரீகம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X